4 வருவாய் கிராமங்களுக்கு

மக்கள் நேர்காணல் முகாம்

Update: 2024-12-20 11:18 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், இடையாத்தங்குடி, கிடாமங்கலம், சேஷமூலை, தென்பிடாகை உள்ளிட்ட நான்கு வருவாய் கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, நாகை வட்டாட்சியர் ராஜா தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள் ரம்யா, ராஜேஸ்வரி, கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், இலவச வீட்டு மனை பட்டா. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாயக்கூடம், ஆற்றின் கரைகளில் தடுப்பு சுவர் அமைத்து தரக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர்கள் இளமுருகன், சத்தியதாஸ், சரவணன், சிவகாமசுந்தரி, பிரகாஷ் மற்றும் கிராம உதவியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News