திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போலீசார் விசாரணை;

Update: 2024-12-20 09:27 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோன்றம்பள்ளி பகுதியில் பீரோ உடைக்கப்பட்டு 55 ஆயிரம் பணம் கொள்ளை போலிசார் விசாரணை* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோன்றம்பள்ளி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி செல்வி (40) இவர் கணவன் இல்லாத நிலையில் பெங்களூரில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருடைய வீட்டை செல்வியின் தாயாரான லிங்கம்மாள் கவனித்து வரும் நிலையில் நேற்று இரவு மாடு கன்று ஈன்றதால் அதனை பராமரிக்க வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகைகளில் இருந்துள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 55 ஆயிரம் பணம் கொள்ளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் காலை வீட்டிற்கு வந்த லிங்கம்மாள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News