திருப்பத்தூரில் மாவட்ட நூலக கட்டிடம் கட்ட பூமி பூஜை. கலெக்டர் எம்எல்ஏக்கள் பங்கேற்பு.

திருப்பத்தூரில் மாவட்ட நூலக கட்டிடம் கட்ட பூமி பூஜை. கலெக்டர் எம்எல்ஏக்கள் பங்கேற்பு.;

Update: 2024-12-20 09:31 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட நூலக கட்டிடம் கட்ட பூமி பூஜை. கலெக்டர் எம்எல்ஏக்கள் பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் 3.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட நூலக கட்டிடம் கட்டும் பணிக்கான துவக்க விழா நேற்று மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தனர். இதில் நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் மோகன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மைய நூலகர் எழிலரசன், வாசகர் வட்ட தலைவர் அட்சயா முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜீவிதா பார்த்திபன், அபிராமி பாரத், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News