ராசிபுரத்தில் அஞ்சல் அலுவலகம் எதிரில் அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியல்...

ராசிபுரத்தில் அஞ்சல் அலுவலகம் எதிரில் அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியல்...

Update: 2024-12-20 10:09 GMT
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் ராகுல்கந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அஞ்சல் அலுவலகம் எதிரில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜுன் தலைமையில் 50 மேற்பட்ட விசிகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஜோதிபாசு, ராசிபுரம் நகர செயலாளர்கள் சுகுவளவன் ,பிரபு, சங்கர், ராசிபுரம் நகர மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் ராமன் ,பட்டணம் பேரூர் செயலாளர் இளையராஜா ,கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சதீஷ், ராவணன் பவுண்டேஷன் அபிராமன் ,உள்ளிட்ட மாநில ,மாவட்ட, ஒன்றிய ,நகர ,பேரூர், முகம் பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Similar News