தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை கிரைம் பிரான்ஞ் பகுதியில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை தெற்கு வாசல் கிரைம் பிரான்ஞ் அருகே இன்று (டிச.20) மாலை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அமித்ஷா அவர்கள் அம்பேத்கரை பற்றி பேசியதை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.