காந்திபுரம்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் !
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் உதவிகள் குறித்த பிரச்சாரம் !
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் உதவிகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டன. இதில் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி, சிறப்பு உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் பற்றிய தகவல்கள் அடங்கும். மேலும், இந்த திட்டங்களை எவ்வாறு பெறலாம், யார் தகுதியானவர்கள், எந்த ஆவணங்கள் தேவை என்பது போன்ற விவரங்களும் விளக்கப்பட்டன.