மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Update: 2024-12-20 11:42 GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்டமேதை அம்பேத்கர் குறித்து பேசியதை கண்டித்து, நாகை மாவட்டம் கீழையூர் கடை தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோர் அமித் ஷா பேசியதை கண்டித்து பேசினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி சங்கர், விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் எம்.பர்ணபாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News