அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி விவகாரம்…..-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கடிதம்!

நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களுக்கு உதவும் வகையில் இப்பிரச்சனையை தூதரக ரீதியில் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Update: 2024-12-20 13:09 GMT
ஓமன் நாட்டில், நாமக்கல் முட்டைகளை விநியோகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், முட்டை ஏற்றுமதியாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்று, முட்டை மற்றும் கோழிப்பண்ணை பொருட்கள் ஏற்றுமதி சங்கப் பொருளாளர் கேசவன், நாமக்கல்லில் (நேற்று டிசம்பர் -19)வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்... அதில் தெரிவித்துள்ளாதாவது....
சமீபத்தில் ஓமன் அரசு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் முட்டைகளுக்கு இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, குறைந்தபட்ச எடை முட்டை 60 கிராம் இருக்க வேண்டும், அதே சமயம் நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டை 52 கிராம் மட்டுமே. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, குறைந்தபட்சம் ரூ. 15 கோடி மதிப்பிலான இந்திய முட்டைகள் பெருமளவில் சோகர் துறைமுகத்தில் சிக்கியுள்ளன என்பதும் உண்மை.இது தொடர்பாக ஓமன் அரசிடம் இந்த விவகாரத்தை எடுத்துரைத்து, நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களுக்கு உதவும் வகையில் இப்பிரச்சனையை தூதரக ரீதியில் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Similar News