ராசிபுரத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாக்டர் அம்பேத்கர் பற்றி மத்திய அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒரு பகுதியாக ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் திமுகவினர் ஏராளமானோர் மத்திய உள்துறை அமைச்சர் அமீர்ஷா வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.க. செயலா ளர்.என்.ஆர்.சங்கர், வரவேற்பு உரை ஆற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஒன்றிய செயலாளர் கே.பி. ராமசாமி, ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.ஆர். துரைசாமி, வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எம். துரைசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் திருமதி ஆர். கவிதா சங்கர், வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் ராஜேஷ், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், அத்தனூர் பேரூர் தி.மு.க. செயலாளர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சிவக்குமார், ராசிபுரம் ஒன்றிய தி.மு.க. பொருளாளர் ரவி என்கிற முத்துச்செல்வன், நகராட்சி கவுன்சிலர் கந்தசாமி, விநாயகமூர்த்தி, கலைமணி, பிரபு, சாரதி,மற்றும் ஆனந்தன்,தாயகம் சரவணன், பூபாலன், மேலும் வார்டு கழக செயலாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.