நைனாமலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை..

நைனாமலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை..

Update: 2024-12-21 14:57 GMT
நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற நைனாமலை கோவிலில் மார்கழி மாதம் முன்னிட்டு ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நைனாமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு மார்கழி சனிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்தனர். முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் ,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Similar News