ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் திமுக சாா்பில் உணவளிப்பு
அமா்சேவா சங்கத்தில் திமுக சாா்பில் உணவளிப்பு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளா் அணி சாா்பில், ஆய்க்குடி அமா்சேவா சங்கக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அணியின் துணை அமைப்பாளா் கரிசல் வேலுச்சாமி ஏற்பாட்டில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளா் ஜெயபாலன் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். மாவட்ட துணைச் செயலா் கென்னடி, மாவட்டப் பொருளாளா் ஷெரீப், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஆறுமுகச்சாமி, முத்துப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம், திவான் ஒலி, பேரூா் செயலா்கள் சிதம்பரம், சுடலை, குட்டி, முத்தையா, தொழிலாளா் அணித் தலைவா் மாரிமுத்துபாண்டியன், துணை அமைப்பாளா்கள் மோகன்ராஜ், டான் கணேசன், மணி, மாணவரணி மாவட்ட அமைப்பாளா் ஜே.கே. ரமேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.