நாமக்கல் - குறிஞ்சி நகர் குளத்தை ஆழப்படுத்த வேண்டும்! மாமன்ற உறுப்பினர் இளம்பரிதி மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை

குறிஞ்சி நகரில் உள்ள 1.39 செண்ட் இடத்தை ஆழப்படுத்தி நீர் தேங்குமாறு செய்ய மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2024-12-21 15:09 GMT
நாமக்கல் - குறிஞ்சி நகர் குளத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று நாமக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் இளம்பரிதி மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாநகராட்சி 34-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்பரர் வ.இளம்பரிதி மாநகராட்சி ஆணையாளருக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.... நாமக்கல் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட கொண்டிசெட்டிபட்டி ஏரி ஒவ்வொரு வருடமும் பெய்யும் மழைக்கு ஏரி நிரம்பி வீடுகளுக்கும், பள்ளிகளுக்கும் உள்ளே நீர் வருவதால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதை தடுக்கும் வண்ணம் இந்த ஏரிக்கு வரும் மழைநீர் குறிஞ்சி நகர் வழியாக தான் வருகிறது. அந்த குறிஞ்சி நகர் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான 1.39 செண்ட் குட்டைக்கு சம்மந்தமான இடம் உள்ளது. ஆனால், அந்த இடம் நிலபரப்புக்கு சமமாக உள்ளதால் அதன்வழியே நீர் தேங்காமல் நேரடியாக கொண்டிசெட்டிபட்டி ஏரிக்கு வந்துவிடுகிறது. எனவே, குறிஞ்சி நகரில் உள்ள 1.39 செண்ட் இடத்தை ஆழப்படுத்தி நீர் தேங்குமாறு செய்ய ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Similar News