திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், குளித்தலை, பஜனைமடம், கொல்லம்பட்டரை தெருவை சேர்ந்தவர் முருகேசன் வயது 64. இவர் டிசம்பர் 19ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது,அதே சாலையில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் முருகேசன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முருகேசனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.