புதிய நியாய விலை கடை திறப்பு விழா.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பத்தூர் ஊராட்சியில் தப்பலாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துடன் இணைந்த புதுப்பத்தூர் பகுதியில் 15.50 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளரும் ஆன பூண்டி.கலைவாணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய தலைவர் புலிவலம்.A.தேவா ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பல இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.