விழுப்புரத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது

மாவட்ட சேர்மன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-12-21 16:28 GMT
விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஷூலாதேவி சேரன் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஊராட்சி குழுவின் செயலாளர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்செல்வி கேசவன், வனிதா அரிராமன், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில், வானுார் ஊராட்சி ஒன்றியம் கிளியலுாரில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் காத்திருப்போர் கூடம் கட்டடட பணிகள் மேற்கொள்ளப்படும்.மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் சேதமடைமந்த பகுதிகளை கள ஆய்வு செய்து, உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்ட முதல்வர், துணை முதல்வர், வனத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு மூலம் 2024-25ம் ஆண்டு, மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் நிதி பெற்று, நிரந்தரமான மூலதன பணிகளை தேர்வு செய்து, சீரமைப்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Similar News