கலெக்டர் பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு பாராட்டு

Update: 2024-12-22 09:15 GMT
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 19, 20ம் தேதிகளில், ஈரோட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கி வைத்தார். முதல்வரின் வருகையையொட்டி, மேடை அமைத்தல், சாலையை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், மாநகராட்சி சார்பில் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டது. இதில், 4 மண்டலங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து, சிறப்பாக பணியாற்றி மாநகராட்சி ஊழியர்களை, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஆணையர் மனிஷ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் நேற்று பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்

Similar News