கோவிலூரில் சமத்துவ கிறிஸ்துமஸ் வழிபாடு

நல்லமபள்ளி அருகாமையில் உள்ள கோவிலூர் சவேரியார் தேவாலயத்தில் சமத்துவ கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது

Update: 2024-12-23 01:40 GMT
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட கோவிலூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது நேற்று டிசம்பர் 22, மாலை 7 மணி அளவில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் சமத்துவ கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது இதில் நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி, சீயோன் காலசபை பாஸ்டர், குப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் வங்கியில் உள்ள 11 அன்பியங்கள் வழியாக சிறப்பு நடன மற்றும் நாடக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பின்னர் கிறிஸ்மஸ் செய்தி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இனிப்பு வழங்கி சமத்துவ கிறிஸ்மஸ் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News