கனமழையால் தனியார் வாகன காப்பகத்தின் சுவர் விலை உயர்ந்த கார்கள் மீது இடிந்து விழுந்ததில் பல லட்சம் பொருட் சேதம்.

கனமழையால் தனியார் வாகன காப்பகத்தின் சுவர் விலை உயர்ந்த கார்கள் மீது இடிந்து விழுந்ததில் பல லட்சம் பொருட் சேதம்

Update: 2024-12-23 15:38 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நேற்று இரவு முதல் அதிகாலை வரை சுமார் மூன்று மணி நேரம் கழித்து வாங்கிய கனமழையால் தனியார் வாகன காப்பகத்தின் சுவர் விலை உயர்ந்த கார்கள் மீது இடிந்து விழுந்ததில் பல லட்சம் பொருட் சேதம். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சுமார் மூன்று மணி நேரம் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது இதன் காரணமாக சாலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் ஆறாக ஆர்ப்பரித்து ஓடியது. இந்த நிலையில் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை ஆனந்த் திரையரங்கம் அருகே உள்ள தனியார் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த வாகன காப்பகத்தில் ராஜபாளையம் நகரின் நெருக்கடியான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அவர்களது வாகனங்களை நிறுத்த இடம் இன்றி இது போன்ற வாகனம் காப்பங்களில் நிறுத்தி வைத்து பராமரித்து வந்தனர். அதன்படி இவ்வாகன காப்பகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்கள் ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் சரக்கு வாகனங்கள் உட்பட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து மூன்று மணி நேரம் பெய்த கனமழை காரணமாக வாகன காப்பகத்தின் ஒரு பக்க மதில் சுவர் கனமழையினால் இடிந்து சரிந்து விழுந்தது. இரவு மற்றும் அதிகாலை நேரம் என்பதனால் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும் சுவரை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சொகுசு கார்கள் இரண்டு ஆட்டோக்கள் இரண்டு டூவீலர்கள் உட்பட 15த்திற்க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் மீது சுவர் இடிந்து விழுந்து அனைத்து வாகனங்களும் முற்றிலும் சேதமடைந்தன. இதன் மூலம் வாகன உரிமையாளர்களுக்கு சுமார் பல லட்சம் மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. நகரின் முக்கிய பகுதியில் உள்ள வாகன காப்பகத்தின் சுவர் கன மழை காரணமாக இடிந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News