கள்ளக்குறிச்சி: அபாயத்தில் தென்பெண்ணை ஆற்று மேம்பாலம்....

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அபாயத்தின் விளிம்பில் தென்பெண்ணை ஆற்று மேம்பாலம். மீண்டும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்க வாய்ப்பு! விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

Update: 2025-12-28 07:45 GMT
அபாயத்தின் விளிம்பில் தென்பெண்ணை ஆற்று மேம்பாலம். மீண்டும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்க வாய்ப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டபட்டதாகும். தினசரி பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்த நிலையில் 60ஆண்டுகளுக்கு பின் 2020ம் ஆண்டு நெடுஞ்சலைத்துறையினர் வாகன போக்குவரத்தை நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர். பின்னர் சில மாதங்களில் பரமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் போக்குவரத்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தை தாங்கி பிடிக்க கூடிய தூண்களில் சிலவற்றில் சுற்றுசுவர் பெஞ்சல் புயல் வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தூண்களை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பு கட்டைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் மேம்பாலத்தின் தூண்கள் பழுதாகி மேம்பாலமும் சேதமடைந்து அதன்மூலமாக ஆயிரக்கணக்கான வாகனங்களின் போக்குவரத்தும் பொதுமக்களின் பொதுப்போக்குவரத்தும் முற்றிலுமாக தடைபட வாய்ப்புள்ளது. மேம்பாலம் முற்றிலும் பழுதடைவதற்குள் மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறைதினரும் பழுதடைந்த மேம்பால அஸ்திவாரத்தை சீரமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News