கந்தம்பாளையம் அருகே வெளி மாநில தொழிலாளி மயங்கி விழுந்து பலி.
கந்தம்பாளையம் அருகே தனியார் நிறுவனத்தில் வெளி மாநில தொழிலாளி மயங்கி விழுந்து பலி போலீசார் விசாரணை
பரமத்தி வேலூர், டிச.23: பீகார் மாநிலம் நாளந்தா அருகே கிராம் பகுதியை சேர்ந்தவர் வீரேந்திர ரவிதாஸ் (49). இவர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே தொட்டியந்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் இரும்பு கம்பி தயாரிக்கும் கம்பெனியில் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது மதியம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வீரேந்திர ரவிதாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரேந்திர ரவிதாஸின் சகோதரர் மித்லேஸ் ரவி தாஸ் (43) என்பவர் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.