மகன் இறந்த சோகத்தில் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை!
கோவில்பட்டியில் மகன் இறந்த சோகத்தில் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டியில் மகன் இறந்த சோகத்தில் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (68), விவசாயி. இவரது மனைவி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்பு மகனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மகனும் இறந்து விட்டாராம். இதனால் தனிமையில் வாடிய மாடசாமி வாழ்க்கையில் வெறுப்படைந்து அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.