திருச்சுழி அருகே தனியார் பேருந்து மீது கல்குவாரி டிப்பர் லாரி மோதியதில் பள்ளி மாணவிகள் உள்பட 4 பேர் காயம்

திருச்சுழி அருகே தனியார் பேருந்து மீது கல்குவாரி டிப்பர் லாரி மோதியதில் பள்ளி மாணவிகள் உள்பட 4 பேர் காயம்

Update: 2024-12-23 15:44 GMT
திருச்சுழி அருகே தனியார் பேருந்து மீது கல்குவாரி டிப்பர் லாரி மோதியதில் பள்ளி மாணவிகள் உள்பட 4 பேர் காயம் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை மடக்கி பிடித்த போலீசார் ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் செயல்படும் கல்குவாரிகளிலிருந்து இருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று திருச்சுழி வழியாக நரிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சுழி அருகே மைலி விலக்கு பகுதியில் எதிரே அதிவேகமாக நரிக்குடியிலிருந்து திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்த, தனியார் கல்குவாரி டிப்பர் லாரி ஒன்று, நரிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது‌ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்த பூமிநாதன்(49), மற்றும் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் குருந்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா(17), களத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த விஜய தர்ஷினி(16) மற்றும் மானூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சக்தி(18) ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ விபத்து ஏற்படுத்தி விட்டு அந்த கல்குவாரி டிப்பர் லாரி ஓட்டுநர் லாரியுடன் அங்கு இருந்து தப்பி சென்றார். திருச்சுழி போலீசார் லாரியை விரட்டிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் டிப்பர் லாரி ஓட்டுநர் சிவகங்கையை சேர்ந்த சின்னத்துரை என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருச்சியில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அதிவேகமாக செல்லும் கல்குவாரி லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது

Similar News