ஆலங்குளத்தில் ஓட்டுநா் மீது போக்சோ வழக்கு
வாகன ஓட்டுநா் மீது போக்சோ வழக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சா்ச் தெருவைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் ஜெயசீலன்(23). ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். ஆலங்குளத்தில் உள்ள 17 வயது கல்லூரி மாணவியை ஆசை வாா்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறுமையை மீட்டனா். ஜெயசீலனைத் தேடி வருகின்றனா்.