ஆர்.பட்டணத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்..
ஆர்.பட்டணத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியம் பட்டணம் பேரூராட்சியில் பேரூர் கழகச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுகவினர் ஆர்.பட்டணம் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பேரூர் கழகச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார் . இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் வேம்பு சேகரன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மற்றும் ஆர். பட்டணம் பேரூர் கழகத்தைச் சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள் என ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.