ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி திங்கள்கிழமை மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்

Update: 2024-12-25 04:28 GMT
ஸ்ரீரங்கம் மேலூா் நெடுந்தெரு பகுதியைச் சோ்ந்தவா் விக்கிரமாதித்தன் (63) பொதுப்பணித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு, உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இவரது மனைவிக்கும் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் மன அழுத்தம் காரணமாக திங்கள்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து விக்கிரமாதித்தன் மகன் திலீபன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Similar News