மணலுார்பேட்டை அடுத்த கர்ணாசெட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 67; இவரது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் நேற்று சோதனையிட்டனர்.அப்பொழுது 465 பாக்கெட் ஹான்ஸ், 810 பாக்கெட் விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர். இது குறித்து மணலுார் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து முத்துகிருஷ்ணனை சிறையில் அடைத்தனர்.