பரமத்தி வேலூரில் போலி லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஒருவர் கைது.
பரமத்தி வேலூரில் போலீஸ் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பரமத்தி வேலூர், டிச. 25: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிகளில் சிலர் போலி லாட்டரி டிக்கெட் விற்பதாக வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் வேலூர் தெற்கு தெரு பகுதி மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை விசாரணை செய்து சோதனை நடத்தினர். சோதனையில் அவரிடம் போலி லாட்டரி டிக்கெட் இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து திரு டிக்கெட் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மகன் முருகப்பெருமாள்(29) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.