தமிழ் சிந்தனை பேரவை சார்பில் மகாபாரத சொற்பொழிவு

குமாரபாளையத்தில் தமிழ் சிந்தனை பேரவையின் பத்தாம் நாள் இசை சொற்பொழிவு

Update: 2024-12-25 15:15 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் தனலட்சுமி மண்டபத்தில் மகாபாரதம் 18 நாட்கள் தொடர் சொற்பொழிவில் 10 ஆம் நாளான இன்றைய சொற்பொழிவில் ராஜசூய யாகம் சிறப்பு, சிசுபாலன் இறப்பு என்ற தலைப்பில் தமிழ் முதுமணி சுப்பிரமணியன் சொற்பொழிவாற்ற, மிருதங்க வித்வான் லட்சுமணன் தாளமிசைத்து இன்னிசை சொற்பொழிவாக வழங்கினார். இந்த நிகழ்விற்கு தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் ராகு வாழ்க ரமேஷ் குமார் அவர்கள் வரவேற்று வாழ்த்துரை வழங்கி முன்னிலை வகித்தார். அருள்மிகு முனியப்பன் கோவில் வழிபாட்டு குழு அறங்காவலர் பச்சியண்ணன் அவர்கள் தலைமை வகித்தார். நாளை 26.12.2024 வியாழக்கிழமை மதியம் 3 மணி முதல் 6 மணி வரை பதினோராம் நாள் நிகழ்வில் சூதாட்டமும் திரளபதியின் மானம் காத்த மணிவண்ணனும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறும்.

Similar News