பரமத்திவேலூரில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்.

பரமத்தி வேலூரில் உள்ள ஒரு ஆப்டிக்கல்லில் ஒரு 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எறிந்து நாசம்.

Update: 2024-12-25 15:17 GMT
பரமத்தி வேலூர், டிச. 25: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வேலூரை சேர்ந்தவர் நாகரத்தினம் இவர் திருவள்ளுவர் சாலையில் மகா என்ற பெயரில் மென்பொருள் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் கண்ணாடி கடையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் ஏற்பட்ட தீப்பொறியில் இருந்து தீப்பறவி எரியத் தொடங்கியுள்ளது. பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகரத்தினம் மற்றும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீச்சியிட்டு ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் அனைத்தனர். இருப்பினும் கடையின் உள்ளிருந்த கண் கண்ணாடிகள், கம்ப்யூட்டர்கள், ஆப்டிக்கல் சம்பந்தமான மென்பொருள்கள் அனைத்தும் தீயில் எறிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Similar News