கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்.
திருவாரூர் மாவட்டம் நகர் பகுதியில் அமைந்துள்ள பாத்திமா புனித அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பங்கேற்று இனிப்புகள் விளங்கி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
திருவாரூரில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம். உலகம் முழுவதும் இன்று கிருஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பிடாரி கோவில் தெருவில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது தொடர்ந்து அனைவருக்கும் கேக் பாக்ஸ் வழங்கி மகிழ்ந்தனர்.