குரும்பேரியில் தவெக கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு,
குரும்பேரியில் தவெக கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு, வட்டாட்சியரிடம் அக்கட்சியினர் கடும் வாக்குவாதம், திமுக, அதிமுக, நாம் தமிழர், விசிக கட்சியின் கொடி கம்பங்களையும் அப்புறப்படுத்த புகார் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு.*
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரியில் தவெக கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு, வட்டாட்சியரிடம் அக்கட்சியினர் கடும் வாக்குவாதம், திமுக, அதிமுக, நாம் தமிழர், விசிக கட்சியின் கொடி கம்பங்களையும் அப்புறப்படுத்த புகார் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு.* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி அம்பேத்கர் நகர் பகுதியில் தவெக கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் அக்கட்சியின் கொடி கம்பம் வைத்து கொடி ஏற்றி உள்ளனர். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அனுமதிபெற்று கொடிகம்பம் அமைக்கும் மாறு அக்கொடி கம்பத்தினை அதிகாரிகள் தரப்பில் அகற்றி உள்ளனர். பின்னர் தவெக கொடி கம்பம் அமைக்க அக்கட்சியினர் அதிகாரிகளிடம் அனுமதிக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனை கண்டு கொள்ளாததால் அக்கட்சியினர் நேற்று இரவு அதே இடத்தில் கொடிகம்பம் அமைத்து கொடி ஏற்றி உள்ளனர். இதனை அறிந்த வருவாய் துறையினர் அக்கம்பத்தினை அகற்ற முயன்ற போது தவெக கட்சியினர் வட்டாட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது திமுக, அதிமுக, நாம் தமிழர்,விசிக, ஆகிய கட்சிகளின் கொடி கம்பங்களும் உரிய அனுமதி இல்லாமல் தான் கொடிகம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை முதலில் அப்புறப்படுத்துங்கள் என கூறி தவெக கட்சியினர் கூறியதால் வருவாய் துறையினர் அங்கிருந்து கிளம்பி சென்றனர். பின்னர் தவெக கட்சியினர் அனைத்து கட்சியின் கொடிகம்பங்களையும் அகற்றுமாறு குரும்பேரி கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது.