நியாய விலை கடை திறப்பு
குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் நியாய விலை கடை திறக்கப்பட்டது.;
குமாரபாளையம் நகராட்சி, திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள், தங்கள் பகுதியின் தொலைதூரத்தில் உள்ள கம்பன் நகர் அமுதம் நுகர்பொருள் வாணிப கழகம் நியாய விலை கடை எண். 23 ல் ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர். நியாய விலைக் கடை தங்கள் பகுதியிலேயே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று, கவுன்சிலர் விஜயா பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தில், திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதனை நகராட்சி தலைவர், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கி பணிகளை துவக்கி வைத்தார். இதில் கவுன்சிலர் விஜயா, அமுதம் நுகர்வோர் வாணிப கழக பகுதி அலுவலர் கார்த்திகேயன், துணை மேலாளர் ரவிக்குமார்,உள்பட பலர் பங்கேற்றனர்.,