கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் பயனற்று கிடந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்தபோது, அருகில் இருந்த வீட்டின்மேல் சாய்ந்து வீடு சேதமடைந்த வீடியோகாட்சி வெளியாகி பரபரப்பு

கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் பயனற்று கிடந்த நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும் போது, அருகில் இருந்த வீட்டின் மேல் சாய்ந்து வீடு சேதமடைந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு.;

Update: 2025-12-21 10:39 GMT
கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் பயனற்று கிடந்த நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும் போது, அருகில் இருந்த வீட்டின் மேல் சாய்ந்து வீடு சேதமடைந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம், அமர்ஜோதி 3-வது தெருவில் அதிக கொள்ளளவு கொண்ட, நீண்ட காலமாக பயனற்று கிடந்த நீர்த்தேக்க தொட்டியை நீக்கிவிட்டு அங்கு அரசு சார்பாக கட்டிடம் கட்ட முடிவு செய்தனர். அப்பகுதியில் நேற்று காலை முதல் நீர் தேக்க தொட்டியை 16வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் பூபதி தலைமையில் தொழிலாளர்கள் இடிக்க முற்பட்டுள்ளனர் . முன் அனுபவம் இல்லாத நபர்களை வைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றப்படும் போது அருகில் இருந்த மீராவிஜயகுமார் என்பவரின் வீட்டின் மேல் நீர்த்தேக்க தொட்டி விழுந்ததால் வீடு முழுவதும் சேதம் அடைந்தது . வீட்டில் பக்கவாட்டு பகுதியில் எதிர்பாராத விதமாக நீர் தேக்க தொட்டி சாய்ந்ததில் வீடு பலத்த சேதம் அடைந்தது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வீட்டின் உரிமையாளர் சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்துவது குறித்து அருகில் இருந்த வீட்டின் உரிமையாளருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமலும், நீர் தேக்க தொட்டியை அகற்றும் போது தகுந்த பாதுகாப்புடன் மாநகராட்சியின் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி அகற்றி உள்ளார் என பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். மேலும், வீட்டின் சேதம் 15 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்ததோடு, இந்த சேதம் குறித்து அப்பகுதி கவுன்சிலரிடம் முறையிட்டு இருப்பதாகவும், உரிய இழப்பீடு தரவேண்டும் எனவும், இல்லை என்றால் வழக்கு பதிவு செய்ய முயற்சி மேற்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். அரசு கட்டிடங்கள் தகுந்த பாதுகாப்புடன் இடித்து வரும் நிலையில், இந்த நீர்த்தோக்க தொட்டியை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் இடித்ததால் தான் இந்த விபத்து நடந்தது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கும் போது அருகில் இருந்த வீட்டில் சாய்ந்து வீடு சேதமடைந்த வீடியோ காட்சி தற்போது வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு செய்யவில்லை எனவும், வீட்டின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியின் அனுமதி எதுவுமின்றி இப்பணி நடைபெற்றது தெரிய வந்துள்ளதால், காவல்துறையில் சம்பந்தப் பட்டவர்கள் மீது புகார் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சுதா தெரிவித்துள்ளார்.

Similar News