சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 115 வது ஆண்டு விழா
குமாரபாளையம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சார்பில், வங்கி நிறுவப்பட்ட 115 வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது;
குமாரபாளையம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சார்பில், வங்கி நிறுவப்பட்ட 115 வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலவச பொது மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், ரத்தவகை கண்டறிதல் முகாம், இருதய சிகிச்சை முகாம், குழந்தைகள் சிகிச்சை முகாம் உள்ளிட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. எஸ்.கே. கிளினிக் டாக்டர் கார்த்திகா தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.