அனைத்தும் மாநிலங்களுக்கும் வழிகாட்டும திட்டங்களை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி வருகிறார் தூய்மை பணியாளர் களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து MLA பேச்சு
இந்தியாவில் உள்ளஅனைத்தும் மாநிலங்களுக்கும் வழிகாட்டும் முன்னோடி திட்டங்களை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்திருச்செங்கோட்டில் நடந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஈஸ்வரன் பேச்சு;
தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார் இதன் முன்னோட்ட நிகழ்வு திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்,கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வாகன ஓட்டுனர்கள் என 348 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட உள்ளது. பணியாளர்கள் பணியாற்றும் நகராட்சி அலுவலகம் பேருந்து நிலையம் நெசவாளர் காலனி சமுதாயக்கூடம் பாரதி திடல் கூட்டப்பள்ளி அண்ணா பூங்கா மலையடிவாரம் துவக்கப்பள்ளி வாரச்சந்தை என ஏழு இடங்களில் பணியாற்றும் இடங்களுக்கேகாலை உணவை டிபன் பாக்ஸ்களில் அடைத்து கொண்டு சென்று வழங்குவது எனவும் முதல் நாள் வழங்கும் பாத்திரத்தை அடுத்த நாள் உணவு வழங்கும்போது பெற்றுக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக நகராட்சி அலுவலகத்தில் 50 பணியாளர்கள் நெசவாளர் காலனி சமுதாயக் கூடத்தில் 46 பணியாளர்கள் என 96 பணியாளர் களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி முன்னோட்ட நிகழ்வை துவக்கி வைத்தனர்.தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது தமிழ்நாட்டில் பல்வேறு நல திட்டங்களை புதுமையான திட்டங்களைதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வருகிறார்.இதனைப் பின்பற்றி தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் பின்பற்றுகின்றனர் உலக நாடுகள் வியந்து பாராட்டுகின்றன. இதன் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப் படுத்தியுள்ளார் அதற்கான முன்னோட்ட நிகழ்வு இன்று நடைபெற்று உள்ளது. உணவு வழங்கும் திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் நகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லி சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறினார். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, புவனேஸ்வரி உலகநாதன், திவ்யா வெங்கடேஸ்வரன், செல்லம்மாள் தேவராஜன், WT. ராஜா, அசோக் குமார், பாரத்,செல்வி ராஜவேல், #நகர் நல அலுவலர் மணிவேல், துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர் சிவா, செல்வராஜ் ஆகியோர்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.