தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டியும், சேலம் நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் இணைந்து கல்லூரி கூட்ட அரங்கில் தேசிய நுகர்வோர் தின விழாவை நடத்தின. விழாவையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உாிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, கமிட்டி பொதுச்செயலாளர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி வணிகவியல் துறை தலைவர் யுவராணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மேட்டூர் வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திவ்யபிரியா கலந்து கொண்டு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ெதாடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் திவ்யபிாியா பரிசுகள் வழங்கி பேசினார். விழாவில் மேட்டூர் வட்ட தனி வருவாய் ஆய்வாளர் வேணுகோபால், கல்லூரி துணை முதல்வர் சங்கீதா, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மீனா நன்றி கூறினார்.