கோயில் நகைகள் திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

கிரைம்

Update: 2024-12-26 13:18 GMT
மாரியம்மன் கோயிலில் அம்மன் நகைகள் மற்றும் பணம் திருடிய இளைஞர்களுக்கு தலா 4 சிறை தண்டனையும் அபராதமும் விடுத்து கும்பகோணம் நீதிமன்றத்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. நாச்சியார்கோவில் தண்டாளம் பிரதான சாலையில் கெங்கை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த பிப், 30-இல் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1.500 மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த கிராம் தங்கநகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். கோயில் நிர்வாகி சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் நாச்சியார்கோயில் போலீஸார் வழக்கு பதிந்து கும்பகோணம் அருகே விசலூர் சோழியக்குடியைச் சேர்ந்த நந்தகுமார் (20), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கவியரசன் (24) ஆகிய இருவரையும் (ஜூன் 8). கைது செய்தனர். கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை நீதிபதி இளவரசி குற்றவாளிகள் 2 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டயும், ரூ.4000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் தலா 2 ஆண்டு சிறை தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே திப்பிராஜபுரம் ரெட்டிபாளையம் முதன்மை சாலை தெருவைச் சேர்ந்த குணசேகரன் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய விசலூர், சோழியக்குடியைச்சேர்ந்த நந்தகுமார் (20), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கவியரசன் (24) ஆகிய இருவருக்கும் கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இளவரசி, தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .

Similar News