கோவை: ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் !
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு.வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளையொட்டி கோவை மக்கள் சேவை மையம் சார்பாக 50 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு.வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளையொட்டி கோவை மக்கள் சேவை மையம் சார்பாக 50 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமானது ஹோஸ்மின் நகர், சிவானந்தா காலனி மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது. பெண்களை தொழில் முனைவோராக முன்னேற்ற இத்திட்டம் உதவியாக இருக்கும் பாரத தேசம் பெண் தொழில் முனைவோர் தேசமாக உருவாகிட இத்திட்டம் ஒரு விதையாக அமையும். இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன் கலந்துகொண்டு விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.