கூடுதல் வார்டுகள் அமைக்க 3 கோடி ஒதுக்கீடு.
மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் கூடுதல் வார்டுகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள ரயில் நிலையம் அருகில் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு, பிசியோதெரபி, மகப்பேறு, அவசர கிசிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே கூடுதலாக பெண்கள், குழந்தைகள் நலம் உள்ளிட்ட 18 வார்டுகள் அமைக்க மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் கோரிக்கையின் பேரில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன் பரிந்துரையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் அரசுமருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட வார்டுகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான பூமி பூஜை பணிகள் விரைவில் நடைபெறும் என, மண்டல தலைவர் சுவிதா விமல் தெரிவித்தார்.