தஞ்சாவூரில் டிச. 28, 29-இல் ஓவிய-சிற்பக் கலைக்காட்சி

கண்காட்சி

Update: 2024-12-26 13:08 GMT
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியரகத்தில்) ஓவிய - சிற்பக் கலைக்காட்சி டிசம்பர் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் த.செந்தில்குமார் தெரி வித்திருப்பது: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின், தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பாக, தஞ்சாவூர் மண்டலத்துக்கு உட்பட்ட (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை) மாவட்டங்களிலிருந்து ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து அவர்களது கலைப் படைப்புகளைப் பெற்று காட்சிப்படுத்திட அரசால் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, இந்த மாவட்டங்களில் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து நூற்றுக்கும் அதிகமான ஓவியப் படைப்புகளும், 20-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைப் படைப்புகளும் பெறப்பட்டு, அப்படைப்புகள் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் டிசம்பர் 28,29 ஆம் தேதிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதில், சிறந்த ஓவிய - சிற்ப கலைப் படைப்புகளுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் 7 கலைஞர் களுக்கும், இரண்டாவது பரிசாக ரூ.3 ஆயிரம் வீதம் 7 கலைஞர்களுக்கும், மூன்றாவது பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதம் 7கலைஞர்களுக்கும் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

Similar News