நாமக்கல் ஐயப்பன் சுவாமிக்கு நெய்யினால் அபிஷேகம் -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
டிசம்பர் 26 வியாழக்கிழமை மண்டல பூஜையையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு பசு நெய்யால் அபிஷேகம் நடத்தப்பட்டது.மூலவர் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு தங்க கவசம் சார்த்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
நாமக்கல்-மோகனூர் சாலை, ஐயப்பன் கோவிலில், 59ம் ஆண்டாக ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து விழா நடத்துகின்றனர். முன்னதாக, கடந்த நவம்பர் 29-ஆம் தேதி நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், டிசம்பர் 1-ஆம் தேதி ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவர் சுவாமிக்கு பால் அபிஷேகம், டிசம்பர் 4ல் லட்சார்ச்சனை ஆரம்பம் , நாமக்கல் ஐயப்ப பக்தர்களின் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி,டிசம்பர் 5ல் சென்னை சாஸ்தா தாசன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது,டிசம்பர் 6ல் லட்சார்ச்சனை பூர்த்தி வினோத் கண்ணன் மற்றும் திருப்பதி குழுவினரின் நாத சங்ககம் நடைபெற்றது, டிசம்பர் 7ல் 108 வலம்புரி சங்கு அபிஷேகம், அன்று மாலை ஐயப்பன் உற்சவர் சிலை நாமக்கல் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்,டிசம்பர் 8இல், நாமக்கல் - மோகனூர்சாலையில் உள்ள கந்தசாமி கண்டர் மேல் நிலைப் பள்ளியில் மகா அன்னதானம் நடந்தது. டிசம்பர் 26 வியாழக்கிழமை மண்டல பூஜையையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு, பக்தர்கள் கொண்டு வந்து தந்த பசு நெய்யால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மூலவர் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு தங்க கவசம் சார்த்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஜனவரி 15ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.