சேலத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த ரவுடி கைது

போலீசார் நடவடிக்கை

Update: 2024-12-26 01:27 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அழகாபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்டிட உரிமையாளரிடம் பொருட்கள் வாங்கவும், மதிய உணவுக்கும் ரூ.700-ஐ வாங்கி கொண்டு அழகாபுரம் ஒடசக்கரை பகுதியில் வடிவேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வேடிவேலுவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.700-ஐ பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசில் வடிவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கட்டிட தொழிலாளியிடம் பணத்தை பறித்தது அழகாபுரத்தை சேர்ந்த ரவுடி ஜீவா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதான ரவுடி ஜீவா மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News