தென்காசியில் நடமாடும் சித்தா மருந்துகள் விற்பனை துவக்கம்
நடமாடும் சித்தா மருந்துகள் விற்பனை துவக்கம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படும் விதம் " டாம்ப்கால்" நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடைபெற்றது. நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.