வைரமடை அருகே காரும்- காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம்.
வைரமடை அருகே காரும்- காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம்.
வைரமடை அருகே காரும்- காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம். ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சின்ன சமுத்திரம் அருகே உள்ள வருந்திய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் பொன்வேல் வயது 24. கார் டிரைவர். இவரது காரில் இவரது மனைவி ரூபிகா வயது 24 மற்றும் அவரது தாயார் தமிழரசி வயது 68 ஆகியோர் டிசம்பர் 24ஆம் தேதி காலை 8:30 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது கார் வைரமடை செக் போஸ்ட் அருகே சென்றபோது, எதிர் திசையில் கோவை மாவட்டம், வீரப்பம்பாளையம், ராய் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் குருசாமி ராஜ் வயது 41 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு கார், பொன்வேல் ஓட்டிச் சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பொன்வேல், அவரது மனைவி ரூபிகா, அவரது தாயார் தமிழரசி ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு, கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பொன்வேல் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குருசாமி ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.