செங்காளிபாளையம் டாஸ்மார்க் கடை அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
செங்காளிபாளையம் டாஸ்மார்க் கடை அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
செங்காளிபாளையம் டாஸ்மார்க் கடை அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகா தரப்பட்டி அருகே உள்ள செங்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் 45. இவர் டிசம்பர் 24 ஆம் தேதி காலை 6 மணி அளவில்,செங்காளி பாளையத்திலிருந்து டெக்ஸ் பார்க் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்காளி பாளையம் டாஸ்மார்க் கடை அருகே சென்றபோது, அதே திசையில் வேகமாக வந்த ஒரு அடையாளம் தெரியாத டூவீலர், நடந்து சென்ற தர்மலிங்கம் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த தர்மலிங்கத்திற்கு தலை மற்றும் வலது கையில் பலத்த காயமேற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த தர்மலிங்கத்தின் மனைவி தேவி வயது 40 என்பவர் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.