உடுமலையில் இசைக்கருவிகள் வாசித்து பள்ளி மாணவன் உலக சாதனை
சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஹைரேஞ்ச் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதணை அமைப்பு சார்பில்நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் மிருதங்கம் வீணை கீபோர்டு புல்லாங்குழல் போன்ற நான்கு விதமான இசைக் கருவிகளை கொண்டு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து வாசித்து பள்ளி மாணவன் ஹரிஷ் கிருஷ்ணா ரமோ உலக சாதனை படைத்தார். மேலும் வெற்றி பெற்ற மாணவனுக்கு ஹைரேஞ் வோர்ட் ரெக்கார்ட்ஸ் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் பள்ளி மாணவனுக்கு சான்றிதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர் சிவநெறிச்செல்வன் திருவா ஆடுதுறை ஆதீன சைவ சித்தாந்த மையப் பேராசிரியர் ஜெயலிங்க லிங்க வாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதற்கிடையில் ஹை ரேஞ்ச் புக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆய்வாளர் குணசேகரன் கூறும்போது மரகதம் யோகாலயத்தின் 1047 ஆவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதுபோன்ற உலக சாதனைகள் மனிதர்களின் பண்பாட்டையும் புனிதத்தையும் உண்மை தன்மையும் வெளிப்படுத்தும் கருவிகள் என்று பேசினார்