கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள் இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., காசாம்பு பூமாலை,மாநில செயற்குழு உறுப்பினர் ராமு, முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் மாநில துணை செயலாளர் ராமு, சமூக நீதிப்பேரவை மாவட்ட தலைவர் சிவராமன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் ,நடைமுறைப்படுத்தாக தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, சாலையோரமாக நிற்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதியம் 11.55 மணியளவில், கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், கலெக்டர் அலுவலகம் எதிரே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.