தியாகதுருகம் அருகே போதை பாக்கு விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகம் அடுத்த சாத்தபுத்தூர் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி நேற்று வாகன ரோந்து சென்றார்.தெற்கு தெருவில் பெட்டிக்கடை வைத்திருந்த பரமசிவன் மகன் வெள்ளையன், 48; கடையில் சோதனை நடத்தினார். விற்பனைக்காக உள்ளே பதுக்கி வைத்திருந்த போதை பாக்கு என தடை செய்யப்பட்ட 250 போதை பாக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வெள்ளையனை கைது செய்தனர்.