எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்த விசிகவினர்

தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு

Update: 2024-12-24 02:14 GMT
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமரியாதை செய்யும் விதமாக பேசிய, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும், தர்மபுரி மாவட்ட விசிக சார்பில், ரயில் மறியல் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி மாவட்ட மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விசிக தர்மபுரி தொகுதி, செயலாளர் சக்தி தலைமையில் தலைமையில் மனு அளித்தனர் அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் பேசி, சமூக பதட்டத்தை ஏற்ப டுத்திய உள்துறை அமைச் சர் அமித்ஷா மீது தேச விரோத சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது, உடன் விசிக நிர்வாகிகள் நந்தன், மின்னல் சக்தி, சாக்கன் சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Similar News