மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
மதுரை அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்
ஓசூர் போகலுரை சேர்ந்த கண்ணன் (46) என்பவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாப்பாபட்டியில் நடைபெற்று வரும் காளியம்மன் கோவில் திருவிழாவிற்காக நேற்று முன்தினம் (டிச.22) வந்திருந்தார். இவர் திருவிழாவிற்காக அவரின் பூர்வீக வீட்டின் முன்பு டியூப் லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒன்றை மாற்றி கட்ட முயன்ற போது, இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக இவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பலியானார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.